மௌலாய சல்லி வஸல்
லிம்தாஇ மன்அபதா!
ஆலாஹ பீபிக்க ஹய்
ரில் ஹல்கி குல்லுஹிமி!
அகிலமெல்லாம் அருள் புரியும்
அல்லாஹ்வே அருள் புரிவாய்!
அண்ணல் நபி சொன்னமொழி
அனைத்தையுமே அறியச் செய்வாய்!
அன்பொழுகும் விழுமியங்கள்
அழகான நற்குணங்கள்!
பண்பொழுகும் கலையனைத்தும்
பயின்றிடவே அருள் புரிவாய்!
சிறப்பளிக்கும் எமதூராம்
முஸ்லிம் ஹல்மில்லாவ!
பாடசாலை அதிபர் முதல்
பயிற்சி விக்கும் ஆசிரியர்!
மாணவர்கள் அனைவரையும்
மாண்புடனே திகலச் செய்வாய்!
மௌலாய சல்லி வஸல்
லிம்தாயி மன்அபதா!
ஆலாக பீ பிக்க ஹய்
ரில்ஹல்கி குல்லுஹிI!